search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஜராத் கலவரம்"

    குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கலவரத்தின்போது கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும் அரசுப் பணியும் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. #SC
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணி பெண் 10–க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அவரது குழந்தைகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இவ்விவகாரத்தில் குஜராத் மாநில அரசு வழங்கிய நிதியுதவி ரூ. 5 லட்சத்தை ஏற்க மறுத்து சுப்ரீம் கோர்ட்டு சென்று கூடுதல் நிவாரணம் கோரினார்.


    இவ்வழக்கு விசாரணையை மேற்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு,  குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அதிகாரிகள் மீது இரண்டு வாரங்களுக்குள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. #SC
    குஜராத் கலவரம் தொடர்பாக மோடியை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மீதான வழக்கு 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. #GujaratRiots #Modi #SupremeCourt
    புதுடெல்லி:

    குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் பலர் இறந்தனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

    அப்போது குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். அவர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை 2012-ம் ஆண்டு கலவர வழக்கில் இருந்து விடுவித்தது.



    இந்த கலவரத்தில் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார். அவருடைய மனைவி ஜாகியா ஜாப்ரி, நரேந்திர மோடியை கலவர வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய மனுவை குஜராத் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நிராகரித்தது.

    இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனை நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் விசாரிக்க உள்ளனர். #GujaratRiots #Modi #SupremeCourt 
    குஜராத் கலவரத்துக்கு மோடி உடந்தையாக இருந்தார் என குற்றம் சாட்டி பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பாட், 22 ஆண்டுகால பழைய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். #SanjivBhatt
    காந்திநகர்:

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் பாட் 1996-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் மோடி முக்கிய உடந்தையாக இருந்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

    தொடர்ந்து பணிக்கு வராத காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டு காவல் துறை பதவியில் இருந்து சஞ்சய் பாட் நீக்கப்பட்டார். இந்நிலையில், 22 ஆண்டுகால பழைய வழக்கில் பாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    1996-ம் ஆண்டில் சஞ்சீவ் பாட் பனஸ்கந்தா மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். வழக்கில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, 1996-இல் ஒரு கிலோ அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததாக சஞ்சீவ் பாட் தலைமையிலான பனஸ்கந்தா போலீஸார் சுமர்சிங் ராஜ்புரோஹித் எனும் வழக்கறிஞரை கைது செய்துள்ளனர். பலன்பூர் நகரில் ராஜ்புரோஹித் தங்கியிருந்த விடுதியில் இருந்து அந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பனஸ்கந்தா போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் போலீஸார், வழக்கறிஞர் ராஜ்புரோஹித் இந்த வழக்கில் தவறாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்று விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்தது. மேலும், ராஜ்புரோஹித் அவரது இல்லத்தில் இருந்து பனஸ்கந்தா போலீஸாரால் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

    இதற்கிடையில், ராஜ்புரோஹித் தொடுத்த வழக்கின் தீர்ப்பாக குஜராத் ஐகோர்ட் இந்த வழக்கை சிஐடி-க்கு மாற்றியும், விசாரணையை 3 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த விசாரணையில் சஞ்சீவ் பாட்டுக்கு எதிராக கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவர் உட்பட பலர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஐடியின் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.  
    ×